கோ சோக் தோங் Enable விருதுகளின் ஆறாவது பருவத்தில், உடற்குறையுள்ள 13 பேருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
பல தரப்பினரை உள்ளடக்குவதில் அவர்கள் ஆற்றிய உன்னதப் பங்கிற்காக அவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
விருது பெற்றவர்களில் சிங்கப்பூர் சைகைமொழி நிபுணர் ஆண்டிரு தே (Andrew Tay) இவ்வாண்டு உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்ற ஜெரலின் டான் (Jerayn Tan) ஆகியோர் அடங்குவர்.
உடற்குறையுள்ளோர் பற்றிய விழிப்புணர்வை அதிகரித்தவர்களையும் அவர்களின் உரிமைகளை முன்னெடுத்துச் சென்றவர்களையும் கோ சோக் தோங் Enable விருது அங்கீகரிக்கிறது.
அதில் இரு பிரிவுகள் – ஒன்று சாதனையாளர் பிரிவு, மற்றொன்று Promise பிரிவு.
உடற்குறையுள்ளோர் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க உதவியதற்காக அவருக்கு விருது வழங்கப்பட்டது.
அதிபர் தர்மன் சண்முகரத்னமும் ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சர் கோ சோக் தோங்கும் விருதுகளை வழங்கினர்.
Source: Seithi Mediacorp